அன்பு காட்டி அரவணைத்த காவலர், பிரிய மனமில்லாமல் தவியாய் தவித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்...

0 6357

நாமக்கல்லில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அவரிடம் அன்பு காட்டிய போலீஸ்காரரை விட்டுப் பிரிய மனமில்லாமல் தவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு உறவினர்களால் கைவிடப்பட்ட சிவாவை பார்த்த காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ,பல மாதங்களாக அவருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பராமரித்து வந்தார்.  இதனை தொடர்ந்து வெற்றிவேலின் ஏற்பாட்டின் பேரில் , ஜீவிதம் என்ற தன்னார்வ அமைப்பினர் அவர்கள் நடத்தும் காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல சிவா குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து வண்டியில் ஏற்றினர்.

அப்போது, அன்பு காட்டிய உதவி ஆய்வாளர் வெற்றிவேலை விட்டு  பிரிய மனமின்றி சிவா தவியாய் தவித்தார். அவரை சமாதானம் செய்த வெற்றிவேல், தன்னார்வ அமைப்பினருடன் அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments