பத்திரிக்கையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவு

0 2473
பத்திரிக்கையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது 2012 முதல் 2021 பிப்ரவரி வரை தொடரப்பட்டிருந்த சுமார் 90 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி மற்றும்  வாரப்  பத்திரிகைகளின்  செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர்  மற்றும்  தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர்  ஆகியோர்  மீது போடப்பட்ட சுமார்  90 அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments