இல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை.. நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

0 2659
இல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை கட்டியதாகக் கூறி 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை கட்டியதாகக் கூறி 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பனங்குடியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வீரையன் கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பெயரில் எந்தக் கண்மாயும் இல்லாத நிலையில் முறைகேடு செய்த ஊராட்சி எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments