மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடும் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும், இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும்.
இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அரசு எடுத்துள்ள இந்த மிகமுக்கியமான முடிவு, ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், நாட்டில் சமூகநீதி குறித்த புதிய பார்வையை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments