2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதிக லாபம் ஈட்டிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

0 7613

உலகின் முன்னணி மெமரி சிப் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக அதிக லாபத்தை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சுமார் 81 ஆயிரத்து 700 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, சென்ற ஆண்டின் இதே காலாண்டில்  ஈட்டிய லாபத்தை விட 54% அதிகம் என்று தெரிவிதுள்ள சாம்சங்,  மெமரி சிப்களுக்கு இருக்கும் திடமான விலை, நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டேட்டா சென்டர் துறைகளில் அதிகரித்து வரும் தேவை ஆகிய காரணங்களால் அதிக லாபம் ஈட்டி உள்ளதாக கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments