கூடுதல் மதிப்பெண் பெற, +2 மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள தேர்வால் பல்கலைக்கழகங்கள் அட்மிஷன் பட்டியலை இறுதி செய்ய தடை இல்லை - உயர்நீதிமன்றம்

0 2849
கூடுதல் மதிப்பெண்கள் பெற விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள தேர்வு முடியும் வரை, பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கூடுதல் மதிப்பெண்கள் பெற விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள தேர்வு முடியும் வரை, பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் ஜூலை 31ம் தேதிக்குள்  வெளியிடப்பட உள்ளன. ஆனால், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள தேர்வு முடியும் வரை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அமர்வு, வழக்கை தொடர்ந்த மனுதரார் மாணவர் அல்ல என்பதை சுட்டிக்காட்டியதோடு, மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments