முன்னாள் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்

0 3324
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைத்த விசாகா கமிட்டி ஏற்கனவே விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை தடுத்ததாக எஸ்பி மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடியும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஐஜி, டிஐஜி உள்ளிட்ட சில அதிகாரிகள் சிறப்பு டிஜிபிக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியானது.

குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால் அடுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments