நேர்மையாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேர்மையாக செயல்படுவதாக கூறி, செரியலூர் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
கிராம நிர்வாக அதிகாரியான அருள்வேந்தன், கிராம மக்களுக்கு கேக் வழங்கியதோடு, மரக்கன்றும் நட்டு வைத்தார்.
லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றும் தங்களது ஊர் அதிகாரியை கவுரவிக்கும் விதமாக, பிறந்தநாள் கொண்டாடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
Comments