தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், 2 நாட்களுக்கு நீலகிரி, கோவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 31-ந் தேதி நீலகிரி, கோவை மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும், அரபிக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
Comments