எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளில் வழக்கு

0 4321

சேலத்தில் கொரோனா கட்டுபாடுகளை மீறி, அனுமதியின்றி போராட்டம் நடத்திய புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுமாறு,  சேலம் சூரமங்கலத்தில்அனுமதியின்றி போராட்டம் நடத்தியதோடு, கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறியதாக எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூட்டம் கூட்டுவது, கொரோனா கட்டுப்பாடை மீறி ஒன்று கூடுதல், பேரிடர் காலங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துதல், தொற்று நோயை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments