திருமண ஆசை காட்டி... ரூ. 7 கோடி மோசடி விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ மருமகன் மீது வழக்கு பதிவு..!

0 18953

ன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை, காளப்பட்டியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா, டிஜிபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரின் அடிப்படையில், அருண் பிரகாஷ் மற்றும் மேலும் இருவர் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோவை தங்கம் அளித்துள்ள புகாரில், 'சிந்துஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர் எனவும், பணம் பறிக்கும் உள்நோக்கத்தோடு பொய் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments