சென்னையில் 20 டிராஃபிக் சிக்னல்களில் காற்றுமாசு வடிகட்டி கருவிகளை அமைக்க திட்டம்
காற்று மாசுகளை நீக்கி 60 சதவீதம் வரை சுத்தப்படுத்தும், "வாயு" எனப்படும் காற்றுமாசு வடிகட்டி கருவிகளை சென்னையில் 20 டிராஃபிக் சிக்னல்களில் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, காற்று மற்றும் நீர் மாசுகளை குறைக்கும் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. 50 இடங்களில் காற்று மாசுபாட்டு அளவை கண்காணிக்கும் கருவிகளும் நிறுவப்பட உள்ளன.
நுண்துகள்கள், நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு அளவுகளை கண்காணித்து டிஜிட்டல் போர்டுகளில் காட்டும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன. குறைந்த மாசுபாடு உள்ள பாதையை தேர்ந்தெடுக்க வசதியாக, காற்று மாசுபாடு விவரங்கள் கூகுள் மேப் போன்ற செயலியில் இணைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments