மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தீவிர ஆலோசனைக்கு பிறகே முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
கொரோனா 3ஆவது அலை அச்சுறுத்தல் இருப்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி தான் முடிவெடுக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் பேசிய அவர், கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை பாதிக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இன்னும் அனுமதிக்கப்படாத சூழலில், பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் தான் முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப் பெரம்பூர் ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமாக, இருபுறமும் நடப்பட்ட 500 மரங்களைக் கொண்ட குருங்காடை அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
Comments