கார்த்தி சிதம்பரத்தின் வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து
காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின், வருமான வரிக்கணக்கை மறுமதீப்பீடு செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-2015 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து 3 கோடியே 86 லட்சம் ரூபாய் வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளிக்க போதுமான கால அவகாசத்தை வழங்கி, மறு மதிப்பீடு தொடர்பாக 5 வாரங்களுக்குள் மறு உத்தரவு பிறப்பிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டார்.
Comments