ஆப்கனில் ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனாவின் உதவியை நாடும் தாலிபன்கள்
ஆப்கானிஸ்தானில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனாவின் உதவியை தாலிபன்கள் நாடியுள்ளனர்.பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை சந்தித்த தாலிபன் முன்னணி தலைவர் முல்லா பராதர் அகுந்த் தலைமையிலான 9 பேர் குழுவினர் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை அடுத்த மாதம் 31 ஆம் தேதிக்குள் முழுமையாக வாபஸ் பெற உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ள நிலையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு ஆப்கானிஸ்தான் அமீரகத்தை அமைக்க தாலிபன்கள்திட்டமிட்டுள்ளனர்.
அப்படி அமைந்தால் அங்கு பயங்கரவாத குழுக்களான அல் கொய்தா, லஷ்கரே தொய்பா போன்றவை நுழைந்து ஆப்கானிஸ்தானை தங்களது பயிற்சி முகாம்களாக மாற்றி , தீவிரவாத இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கும் நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் என உலக நாடுகள் அஞ்சுகின்றன.
அதை சமாளிப்பதற்காக, வேறு நாடுகளுக்கு எதிரான தீவீரவாத நடவடிக்கைகளுக்கு அங்கு இடம் கொடுக்கமாட்டோம் என சீனாவிடம் தாலிபன்கள் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments