வங்கிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு
நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சட்டத்தின்படி, வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 90 நாட்களுக்குள், அதன் வாடிக்கையாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பணம் கிடைக்கும் என்றார்.
இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கி கிளைகளுக்கும் இது பொருந்தும் என தெரிவித்தார். வங்கிகளில் தனி நபர் டெபாசிட் பணத்திற்கான காப்பீடு, கடந்த ஆண்டு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
Comments