காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிப் போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

0 2609
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிப் போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிப் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேரைச் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2018 ஏப்ரல் நான்காம் நாள் சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திருநாவுக்கரசர், ஜவாஹிருல்லா, திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாகத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments