பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் ; 7 வயது சிறுமி சாதனை
திருவண்ணாமலை அருகே 7 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகா செய்து சாதனை முயற்சி மேற்கொண்டார்.
வேங்கிக்கால் அடுத்த இடுக்குப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜாராம் சௌபர்ணிகா தம்பதியின் 7 வயது மகள் சமந்தா, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு, பத்மாசனம் உள்ளிட்ட 133 யோகாசனங்களை 32 நிமிடங்களில் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Comments