எம்எஸ்எம்இ துறையை சீரமைக்க நிபுணர் குழு நியமனம் - தமிழ்நாடு அரசு

0 2520
எம்எஸ்எம்இ துறையை சீரமைக்க நிபுணர் குழு நியமனம் - தமிழ்நாடு அரசு

எம்எஸ்எம்இ தொழிற்துறையை மீட்டெடுத்து சீரமைப்பதற்காக, ஓய்வு பெற்ற ஐஎஸ் அதிகாரி சுந்தரதேவன் தலைமையில், தொழிலதிபர்கள், வங்கி-நிதி நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

இந்த குழுவில் மாநில வளர்ச்சி குழுவின் உறுப்பினர் விஜயபாஸ்கர், ஆர்பிஐ முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த் உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழு, கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் எம்எஸ்எம்இ தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை மதிப்பீடு செய்து, அவற்றை சரி செய்வதற்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்கும்.

கடன் பெறும் முறையை எளிமையாக்கி, உற்பத்தி பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments