ஆபத்தான வகையில் அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுனர் ; ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி

0 2800
ஆபத்தான வகையில் அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுனர்

திருச்சியில் இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாத நிலையில், 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரசுப் பேருந்தை ஆபத்தான வகையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசிலை வழியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, கொண்டையம் பேட்டை, கல்லணை சாலை வழியாக பேருந்து சென்றது.

மாநகரப் பகுதிகளில் சாலையோர மின்விளக்குகள் எரிந்ததால் சிரமுமின்றி பேருந்தை செலுத்திய ஓட்டுநர், எல்லையை தாண்டியதும், அந்த வழியே சென்ற இருசக்கர வாகனங்களின் வெளிச்சத்தில் கல்லணை வரை பேருந்தை இயக்கியுள்ளார். இதனை ஒருவர் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

முகப்பு விளக்கு பழுந்தடைந்த நிலையில், மாற்று ஏற்பாடு செய்யாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments