ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : அபராதம் கட்ட தயாராக இல்லை - விஜய்

0 9173
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால் அபராதம் கட்ட தயாராக இல்லை - உயர்நீதிமன்றத்தில் விஜய் தகவல்

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தடை கோரிய வழக்கில், அபராதமாக விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதி, ஒரு லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசிடம் ஏன் வழங்ககூடாது என கருத்து தெரிவித்தார். அதற்கு விஜய் தரப்பில் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதால் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தடை கோரி விஜய் தாக்கல் செய்த வழக்கை தனி நீதிபதி முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments