கர்நாடகத்தில் காவிரியில் திறக்கும் நீரின் அளவு 28,272 கன அடியாகக் குறைப்பு

0 5749

ர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு, 38 ஆயிரம் கன அடியிலிருந்து 28 ஆயிரத்து 272 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் 124 புள்ளி 8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. 84 அடி உயரமுள்ள கபினி அணையில் 80 அடிக்குத் தண்ணீர் உள்ளது.  

தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் காவிரியிர் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக உள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று 34,146 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 666 கனஅடியாகக் குறைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments