பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம்?

0 4513

மதுரையில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுக்கள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்தபோது, உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராதா என்பதும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்ததது.

மேலும், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு வங்கியில் இருந்து ஒரே தவணையாக 36 லட்சம் ரூபாயை எடுத்துள்ளதும் மீதம் 20 லட்சம் வங்கியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments