கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 3041

கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளையும், அங்கன்வாடி மையங்களையும் மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்துணவு மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களைப் பெற்றோர், பொருளாதாரப் பாதிப்பால் வெளிச் சந்தையில் விற்று விடுவதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார். இது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் நாளுக்குத் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments