வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்

0 2822

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க அவசியமில்லை என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உள் இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.

பிற்பகலில் நடந்த விசாரணையின் போது இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments