நிதி நிறுவன மோசடி வழக்கு; ஹெலிகாப்டர் சகோதரர்களின் ஒருவரான எம்.ஆர் கணேஷின் மனைவி கைது

0 2844
நிதி நிறுவன மோசடி வழக்கு; ஹெலிகாப்டர் சகோதரர்களின் ஒருவரான எம்.ஆர் கணேஷின் மனைவி கைது

கும்பகோணத்தில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சகோதரர்களின் ஒருவரான எம்.ஆர் கணேஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் தங்களின் விக்டரி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்காக திருப்பி தரப்படும் என கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாய் தம்பதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே நிதி நிறுவன பொது மேலாளர் ஸ்ரீகாந்த் உட்பட ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, எம்.ஆர் கணேஷின் மனைவி அகிலா மற்றும் நிதி நிறுவன கணக்காளர் வெங்கடேசன்-ஐ கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments