வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படமா? தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 2560
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படமா? தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளதா? என்பது குறித்து பிற்பகல் 2:15க்கு விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதை அடுத்து தாங்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை அமர்வில் முறையிடப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிறபகல் வழக்கை விசாரிப்பதாக சொன்ன நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments