கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடகத்தின் 23ஆவது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் கலந்துகொண்டு பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
Comments