ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி
ஒலிம்பிக் பேட்மின்ட்ன் போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரிட்டன் அணி இந்திய அணியை நான்குக்கு ஒன்று என்கிற கோல் கணக்கில் தோற்கடித்தது.
பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனையை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஆடவருக்கான வில்வித்தைப் போட்டியில் முதல் சுற்றுப் போட்டியில் உக்ரைன் வீரரை வென்ற இந்தியாவின் தருண்தீப் ராய், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி வீரரிடம் தோல்வியடைந்தார்.
ஆடவருக்கான பாய்மரப் படகுப் பந்தயத்தில் இந்தியாவின் வருண் தாக்கர், கணபதி இணை 18ஆவது இடத்தையே பெற முடிந்தது.
வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூடான் வீராங்கனையை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அவர் அமெரிக்க வீராங்கனையை வென்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிருக்கான மிடில் வெயிட் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி அல்ஜீரிய வீராங்கனையை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
Comments