இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டு பயணத் தடை! தனது குடிமக்களுக்கு சவூதி அரேபிய அரசு எச்சரிக்கை
அரசின் அனுமதி இன்றி சிவப்பு பட்டியலில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால், 3 ஆண்டு பயணத் தடை விதிக்கப்பட்டும் என தனது மக்களை சவூதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா, யுஏஇ, உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதை தடுக்கும் தோக்கில் அவற்றை சிவப்பு பட்டியல் நாடுகளாக சவூதி அரேபியா அறிவித்தது.
ஆனால் கடந்த மே மாதம் முறையான அனுமதி அன்றி சவூதி குடிமக்கள் சிலர் இந்த நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் திரும்பி வரும் போது பெரும் அபராதத்துடன்,3 ஆண்டு பயணத் தடையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments