போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்..! மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் தகவல் தொழில் நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று விசாரணை
போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் தகவல் தொழில் நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று விசாரணை நடத்த உள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக ராகுல் காந்தி உள்பட பலரது மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து விவாதிப்பதற்காக இந்தக்குழு இன்று கூட உள்ளது. இதில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.ஆனால் அதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Comments