உத்தரப் பிரதேசத்தில் பேருந்து பழுதான நிலையில் வேகமாக வந்த லாரி மோதி 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0 4058

த்தரப் பிரதேசத்தின் பாராபங்கியில் பழுதாகி நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பணியாற்றிய பீகார் மாநிலத் தொழிலாளர்கள் அம்பாலாவில் இருந்து சொந்த ஊருக்கு ஈரடுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்து உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியில் நள்ளிரவில் பழுதானதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த லாரி, பேருந்தின் பின்புறத்தில் மோதியது.

இந்த விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments