பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
பெகாஸஸ் செயலிமூலமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெகாஸஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, மேற்கு வங்க மாநிலத்திற்கு கூடுதலாகத் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மாநிலத்தின் பெயர்மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகவும் அவர் கூறினார். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
Comments