கள்ளக்குறிச்சி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ; உடல் நசுங்கி இருவர் உயிரிழப்பு

0 3815
கள்ளக்குறிச்சி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ; உடல் நசுங்கி இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பைபாஸ் சாலையில் அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் கார் ஓட்டுநர் முருகன் மற்றும் காரில் பயணித்த ஆஷிக் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments