காதலி பிரிந்து சென்றதால் காதலியின் குடும்பத்தினரை தாக்கிய காதலன் ; போலீசார் விசாரணை

0 3629
காதலி பிரிந்து சென்றதால் காதலியின் குடும்பத்தினரை தாக்கிய காதலன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் அவரது வீடு புகுந்து இளைஞன் கத்தியால் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பேட்டை பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்ற அந்த இளைஞனும், பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி 20 நாட்களுக்கு முன் வெளியூருக்கு தப்பிச் சென்று திருமணம் செய்து கொண்ட இருவரும், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, காதலன் தன்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக பெண் கூறியதை அடுத்து அவர் பெற்றொருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனால், ஆத்திரத்தில் இருந்த முகேஷ், திங்கட் கிழமை இரவு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, காதலியை விட்டு விட்டு அவரது தந்தை, தாய், சகோதரி மீது மட்டும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினான்.பின்னர், சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்ற முகேஷ் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து காயமடைந்தான். இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments