அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் உட்பட 3800 பேர் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட 3 ஆயிரத்து 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க சதி செய்வதாக கூறி பழையப் பேருந்து நிலையம் அருகே நேற்று சி.வி.சண்முகம் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமீறல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட 3 ஆயிரத்து 800 பேர் மீது, விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments