குருணால் பாண்டியாவுக்கு கொரோனா.. இந்தியா-இலங்கை இரண்டாவது 20 ஓவர் போட்டி ஒத்திவைப்பு..!
இந்திய வீரர் குருணால் பாண்டியாவுக்கு (Krunal Pandya) கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது 20 ஓவர் போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேர் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் வேறு யாருக்கேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மீண்டும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Comments