கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் ? ; பெங்களூருவில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

0 2845
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் ? ; பெங்களூருவில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளர்களாக, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

நான்காவது முறையாக கர்நாடகாவின் முதலமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பா அந்த பதவியில் இரண்டாண்டுகளை நிறைவு செய்த தினமான நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் தாவர் சந்த் கெலாட், எடியூரப்பாவின் அமைச்சரவையையும் கலைத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்யுமாறு பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments