போக்குவரத்து துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு ; தரகராக செயல்பட்டவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

0 19700
போக்குவரத்து துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தரகராக செயல்பட்ட ரவிக்குமார் என்பவரின் சென்னை அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப் பேருந்துகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா, மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் ஆகியவற்றை கொள்முதல் செய்ததற்கான ஒப்பந்தத்தில், டெடி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்கள் மூலம் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு உபகரணங்களை வாங்கி போக்குவரத்து துறைக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே ரவிக்குமாரிடமிருந்து அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் பரிவர்த்தனை நடைபெற்றதா? என்பது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments