ஆபாச வீடியோ விவகாரம் ; நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

0 3939
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ரிமாண்ட்

 ஆபாச பட வழக்கில் கைதானவரும், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹாட்ஸ்பாட்ஸ் என்ற கட்டண செயலி வாயிலாக ஆபாச வீடியோக்களை தயாரித்து ஒளிபரப்பி வந்ததாக ராஜ் குந்த்ரா கடந்த வாரம் மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைல் ஆபாச படங்கள் வாயிலாக சம்பாதித்த பணத்தை அவர் ஆன்லைன் பெட்டிங்கில் செலவழித்ததும், பிட்காயின் வர்த்தகத்தில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட அவரது லேப்டாப்பில் பல ஆபாச படங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் கஸ்டடி முடிந்து இன்று அவர் மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை தவிர மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments