கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5சதவீத உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்தது
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு பத்தரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10.5% இட ஒதுக்கீட்டுக்காக MBC(V) என புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே MBC பிரிவின் கீழ் பொதுவாக விண்ணப்பித்தவர்களுக்கு Auto Correct மூலம் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவிடும், தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வின் போது இட ஒதுக்கீடு முறை முழுமையாக பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
10.5% இட ஒதுக்கீட்டின் கீழ் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சுமார் 16,000 இடங்களும், கலை, அறிவியல் படிப்புகளில் சுமார் 10,000 இடங்களும் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments