ஏற்காட்டில் தொடர்மழை : மலைப்பாதைகளில் உருவான திடீர் அருவிகள்... செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்

0 4147

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, மலைப் பாதைகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.

20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 10 நாட்களுக்கும் மேலாக மழைபெய்து வருவதால், ஏற்காடு ஏரி மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்மழையால் சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.

மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் அருவிகள் முன்பு நின்றபடி செல்பி எடுக்கின்றனர். பேருந்துப் பயணிகள் அருவி போல் தண்ணீர் கொட்டுவதை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments