தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை அறிவிப்பு

0 3578

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்பட எஞ்சிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாமெனவும், அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments