ஊழியர்களில் 98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தகவல்
சுமார் 2 லட்சத்து 36 ஆயிரம் ஊழியர்களில், 98 சதவிகிதம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 171 தடுப்பூசி மையங்களை அமைத்த ரிலையன்ஸ், அதன் வாயிலாக தமது ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ்-ஐ தொடர்ந்து மற்றொரு கார்ப்பரேட் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலெவர் தனது பணியாளர்களில் 90 சதவிகிதமான சுமார் 88 ஆயிரம் பேருக்கும், டாடா கன்சல்டன்சி 70 சதவிகிதம் பேருக்கும், இன்போசிஸ் 59 சதவிகிதம் பேருக்கும் தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
அரசு மையங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறையும், அவற்றை கொண்டு செல்வதில் பிரச்சனைகளும் நீடிப்பதாக கூறப்படும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை திறமையாக நடத்தி தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments