கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை - மத்திய அரசு
கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கருப்புப் பணத் தடைச்சட்டத்தின் கீழ் 107 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 8 ஆயிரத்து 216 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த மதிப்பீடு அரசிடம் இல்லை என்றும் பங்கஜ் சவுத்ரி கூறினார்.
Comments