தொடரும் கனமழை -வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடக கிராமங்கள்..!
தொடர் கனமழையால் வட கர்நாடகாவிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக, அந்த மாநில எல்லையையொட்டி உள்ள வடகர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை, யாதகிரி, ஹாவேரி, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா, உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவற்றின் கரையோரம் உள்ள கர்ஜகி, யாதஹள்ளி, கும்பாரஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
கடலோர மாவட்டமான கத்ரா பகுதியில் 50 வீடுகள் தொடர் மழையால் இடிந்து விழுந்தன.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Comments