மேற்கு வங்காளத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்காளத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாத நிலையில் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்களைக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 20 ஆயிரம் பேர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு 24 Parganas, Murshidabad உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் தங்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் Domkal நகர பள்ளியை சுற்றி வளைத்த மாணவர்கள் பள்ளி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடலில் ஈடுபட்டனர்.
Comments