நாடு முழுவதும் இதுவரை 3.54 கோடி FASTags வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

0 2024

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் இதுவரை 3 கோடியே 54 லட்சத்துக்கும் அதிகமான அளவில் FASTags வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், அனைத்துப் பாதைகளையும் FASTags பாதையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 80சதவிகித த்தில் இருந்து 96சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

FASTags என்பது சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு முறையில் கட்டணப் பணம் எடுக்கப்படுவதாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments