உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதன்முறையாக காய்கறிகள் ஏற்றுமதி..!
உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஹரித்துவார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய், பாகற்காய், பேரிக்காய், கருவேப்பிலை ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும்.
ஏற்கனவே உத்தராகண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தினை வகைகள் கடந்த மே மாதம் டென்மார்க்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில், இந்தியா 11 ஆயிரத்து 19 கோடி ரூபாய்க்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் இது 10 ஆயிரத்து 114 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது காய்கறி பழங்கள் ஏற்றுமதி 9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
Comments