நடிகர் விஜய் சொகுசு கார் வரிவிலக்கு வழக்கு இன்று விசாரணை

0 2165

சொகுசு கார் வரிவிலக்கு வழக்கு தொடர்பாக நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி விதிக்கத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் ரியல் ஹுரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்தும் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இரு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments